நீட் தேர்வுக்கு எதிரான விஜயின் குரலை வரவேற்கிறோம்! செல்வப்பெருந்தகை

1 Min Read

நீட் தேர்வுக்கு எதிரான விஜயின் குரலை வரவேற்கிறோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மக்கள் தலைவர் ராகுல் காந்தியின் கூற்றை பிரதிபலித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.

விஜய்

தமிழக மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலும் பாசிச பாஜக மட்டும் தனியாக உள்ளதையும் மக்கள் நன்கு அறிந்து விரைவில் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விருது வழங்கிய விஜய், நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்றும், தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார்.

Share This Article

Leave a Reply