- கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு 43 கோடி ரூபாய் அளவிற்கு பட்டுப்புடவைகளை விற்பனை செய்துள்ளது.
இந்த விற்பனைக்கு தகுந்தார் போல் தங்களுக்கு 35 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் 10.2 சதவீதம் போனஸ் வழங்குவதாக திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு 35 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க :http://thenewscollect.com/ero-bite-attacking-coconuts-state-governments-should-take-urgent-measures-to-control-the-disease/
இச்சங்கத்தில் இந்த வருடம் 8% டிவிடன்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனை 14 சதவீதமாக வழங்க வலியுறுத்தியும் இவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கூட்டுறவு சங்கத்தில் 1800 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் லாபம் ஈட்டக்கூடிய பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.