மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். சவுக்கு மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிய அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தனர்.
யூ டியூபரான சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தமிழக பெண் போலீசார் பற்றி இழிவாக விமர்சித்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதனால் சவுக்கு சங்கரை தமிழக போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது.

அத்துடன் கோவை உள்ளிட்ட பல மாவட்ட காவல் நிலையங்களில் அடுத்தடுத்து சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தது. இதனால் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தினர்.

தன்னுடை எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்து கொண்டுள்ளார். ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்து கொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள். உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்து கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கும் அளவிற்கு அவர் சமூகத்திற்கு ஆபத்தானவரா என கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சவுக்கு சங்கருக்கு எதிரான கருத்துகளை உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ள நிலையில், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்தாவது கேள்வி குறியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.