காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே நடைபெற்ற பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது.
மக்கள் கோரிக்கைகளை ஏற்று போராட்டங்களை அரசு கவனத்தை செலுத்தி தீர்வு காண்பதில்லை, மக்கள் மது கடைகளோ, வானூர்தி நிலையம் வேண்டாம் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக பாரதப் பிரதமர் திறந்த விமான நிலையம் பயன்பாட்டில் இல்லை, அரசு விமானமே இல்லாத இடத்திற்கு விமான நிலையம் எதற்கு,ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் கட்டுவதால் அதில் கமிஷன் தவிர வேற எதுவும் வராது.
கடலில் பேனா சிலை கட்டுவதற்கு தேதி அறிவிக்கும் பொழுது பேனாவை எடுக்கும் தேதியும் நான் அறிவிப்பேன் – சீமான் மக்கள் வாழ்விடம் எல்லாம் ஆக்கிரமிப்பு என இடிக்கும் பொழுது கடல் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா?
தமிழ்நாடு வளர்ச்சி என பேசுவது பள்ளியில் காலை சிற்றுண்டி, இலவச பேருந்து, படிக்கும் மகளிர்க்கு ரூ.1000 என மக்களை கையேந்தும் நிலைக்கு வைத்துவிட்டு வளர்ச்சி என பேசுவது தவறு, கல்லூரி கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளட்டும் பேருந்து பயண டிக்கெட்டை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

மத்திய, மாநில அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நகர்கிறதை தவிர மக்களின் நகரனுக்காக யோசிப்பதும் இல்லை என்றார்.
முதலமைச்சர் ஆய்வுக்கு செல்லும் பொழுது கொடுக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக நிறைவேற்றும் முதலமைச்சர் தந்தை குடிப்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்
பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி இதைப் பற்றி பேசிவிட்டு கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுத்த கோவிலை திறந்து அரசு வழிபட அனுமதிக்காமல் கோவிலை பூட்டி செல்வது எந்த வகையில் தீர்வாகும். வேங்கை வாசலில் தற்போது வரை நடவடிக்கை இல்லை. சமூகநீதி காவலர்கள் ஆட்சிக்கு வந்ததால்தான் தற்பொழுது இது போன்ற சம்பவம் அதிகமாக நடைபெறுகிறது.
என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.