விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விபசித்து முனிவருக்கு காட்சி விருதையில் கோலாகலம். அங்கு ஏராளமாக பக்தர்கள் பங்கேற்பு.
கடலூர் மாவட்டம், அடுத்த விருத்தாசலத்தில் அருகே உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகம் திருவிழாவில் விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளித்த ஐதீக நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாசி மகம் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரசித்தி பெற்ற விழாவில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சி அளிக்கும் ஐதீக நிகழ்வு செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இந்த கோயில் மகா மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பழமலைநாதர் எழுந்தருளி, எதிர் திசையில் இருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தார்.
அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர் விருத்தாம்பிகையுடனும், அன்ன வாகனத்தில் பாலாம்பிகையும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மற்றும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், விபசித்து முனிவரும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளினர்.

அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாயா’ என்ற பக்தி முழக்கங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதை அடுத்து, சுவாமிகளின் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இந்த ஊர்வலம் புதன்கிழமை (பிப். 21) பிற்பகலில் கோயிலை வந்தடையும்.

வருகிற 23 ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 24 ஆம் தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 25 ஆம் தேதி தெப்ப உற்சவமும், 26 ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அந்த கோவில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்



Leave a Reply
You must be logged in to post a comment.