தமிழில் பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விடுதலை -1’ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.1980 களில் தமிழகத்தில் நடந்த சில போலீஸ் அடக்குமுறைகளை படமாக்கி உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. தெலுங்கில் அல்லு அரவிந்தின் ‘கீதா ஆர்ட்ஸ்’ இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.

மேலும், இந்தப் படம் இந்த ஏப்ரல் மாதத்தில் தெலுங்கில் வெளியாகுமெனத் தெரிகிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘விடுதலை -1’ திரைப்படம் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் நான்கு மாதங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற விடுதலை 1 தெலுங்கிலும் வெற்றி நடை போடும் என எதிர்பார்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.