சிதம்பரம் நடராஜர் கோவிலில் முதல் முதலாக ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் விமான பந்தல் மற்றும் குடை, பல லட்சம் ரூபாயில் பச்சை பதக்க மாலையும், நடராஜருக்கு வைர விபூதி பட்டையும் வழங்கப்பட்டது.
கைலாய மலையில் இருந்து ஒரு லட்சம் ருத்ராட்சத்தை கொண்டு ருத்ராட்ச விமான பந்தல் மற்றும் ருத்ராட்சக் குடை, எல்லாம் வல்ல சிவகாமசுந்தரி ஆனந்த நடராஜபெருமானின் கைலாய வாகனத்தில் வீதி உலா, இன்று நடைபெறுகிறது. ருத்ராட்ச பந்தலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு இன்று ஏழாம் உற்சவமான தங்க கைலாய வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அதனையொட்டி ஸ்ரீ சபாநாயகர் கோவில் டிரஸ்டி பாஸ்கர் தீட்சிதர், பக்தர்கள் மூலம் ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் எல்லாம் வல்ல சிவகாமசுந்தரி நடராஜபெருமானுக்கு செப்பு கம்பிகளால் கட்டப்பட்ட ருத்ராட்ச விமான பந்தல் மற்றும் குடை அமைத்து, ருத்ர அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அதனையொட்டி ருத்ராட்ச பந்தல் மற்றும் குடையை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதரிடம் வாங்கப்பட்டது.

அதேபோல் பல லட்சம் ரூபாயில் பச்சை பதக்க மாலையும், நடராஜருக்கு வைர விபூதி பட்டையும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் செய்யப்பட்ட விமான பந்தல் மற்றும் குடை அமைக்கப்பட்டு, அதற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டதை வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். நடராஜர் கோவிலில் முதன்முதலாக ஒரு லட்சம் ருத்ராட்சத்தில் கைலாய வாகனத்தில் அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் குடையை அனைவரும் பக்தி பரவசத்துடன் பார்த்து செல்கின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் மீது காவல் நிலையத்தில் புகார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயல் அலுவலர் சரண்யா புகார் கொடுத்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுத்த தீசிதர்கள் மீது அறநிலைத்துறை அதிகாரிகள் போலீசில் புகார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விழாவை முன்னிட்டு நாளை தேர் தரிசனமும் நாளை மறுநாள் ஆருத்ரா தரிசனமும் நடைபெற இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆணி திருமஞ்சன திருவிழா நடைபெறும் பொழுது பக்தர்களை கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என பொது தீட்சிதர்கள் சார்பில் அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டது. அந்த பதாகையை அகற்ற வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள் கனக சாமி மீது ஏற்றப்படவில்லை. அறநிலைத்துறை சார்பில் அந்த அறிவிப்பு பதாகை உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு சர்ச்சையாக மாறியுள்ளது.

அது மாதிரியான சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என முன் எச்சரிக்கையாக நாளை நடைபெற இருக்கும். தேர் திருவிழா காண வரும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதாக கோவிலில் சென்றுள்ளனர். அப்பொழுது கனக சபை கேட் உள்பாக்கம் தாழிட்டு பூட்டியதாக தெரிகிறது. அங்குள்ள சிட்தர்களிடம் கேட்கும் பொழுது உள்ளே பூஜை நடைபெறுவதாக அதை அடுத்து பக்தர்கள் இந்து அறநிலைத்துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்து அறநிலைத்துறை அதிகாரி சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கனகசபை மீது பொதுமக்களை ஏன் ஏற்றப்படவில்லை என தீட்சிதர்களிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த திட்சீதர்கள் மீது செயல் அலுவலர் சரண்யா இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் செயல் அலுவலர் புகார் அளித்த உள்ளார் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.