விழுப்புரம் மாவட்டம், அடுத்த டி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடன் முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சாராயம் குடித்துள்ளனர்.
இதனால் திடீரென வயிற்று எரிச்சல் ஏற்பட்டு, பாதிக்கப்படவே உடனடியாக அருகில் உள்ள இரேவேல் பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதை தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், முருகனும், சிவச்சந்திரனும் சற்று உடல் தேறிய நிலையில், பொது வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெயராமன் பெரும் பாதிப்புக்கு உள்ளானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக ஜெயராமனின் மருமகன் அன்பழகன் கூறும் போது;- திடீரென உடல்நல கோளாறு என்று போன் வந்ததும் அடிப்படையில், மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் மாமனார் ஜெயராமன் இருப்பதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாச்சிடிம் பேசிய போது;- புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்த 3 பேரில் ஒருவரான முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.