இரவு கோவிலுக்குச் சென்ற ஆனந்த் ராஜ் தனது சகோதரியின் உடல் நிலை சரியாகாத விரக்த்தியில்ஆத்திரம் பெருக பெருமாள் கோவில் முன்பிருந்த கருடாழ்வார் சிலையை தள்ளிவிட்டு சேதப்படுத்தியிருக்கிறார்.
விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ஆனந்த் ராஜ்(28).
இவருடைய சகோதரி கடந்த சில மாதங்கலாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவரது சகோதரி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்.
தனது சகோதரி படும் கஷ்டத்தைப் பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத ஆனந்த் ராஜின் மனம் அவர் வீட்டருகினிலுள்ள பஞ்சமாதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வசிக்கும் அந்த வரதராஜரை நோக்கிச் சென்றிருக்கிறது.
தினமும் பூஜைகள் செய்வதும் அத் தல பெருமாளை தனது சகோதரிக்காக வணங்குவதும் தனது சகோதரியின் குறைகளை அவரிடம் மன்றாடுவதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
அந்தப் பக்கம் வரும் போதும் போகும் போதும் வரதராஜரை வழிபட்டுவிட்டே செல்வாராம்.எப்படியாவது சகோதரி நலம் பெற வேண்டும் என்பதே இவரது ஆசை.
இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு கோவிலுக்குச் சென்ற ஆனந்த் ராஜ் தனது சகோதரியின் உடல் நிலை சரியாகாத விரக்த்தியில்
ஆத்திரம் பெருக பெருமாள் கோவில் முன்பிருந்த கருடாழ்வார் சிலையை தள்ளிவிட்டு சேதப்படுத்தியிருக்கிறார்.
இது குறித்து செயல் அலுவலர் கார்த்திகேயன் அவர்கள் அளித்த புகாரின் பேரில், வளவனூர் போலீஸார் ஆனந்த் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து
கைது செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.அவரது கோபம் புரிந்தாலும் யார் என்ன செய்யமுடியும்.என்கிறார்கள் போலீசார்.
Leave a Reply
You must be logged in to post a comment.