விழுப்புரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை – பழுதுகள் சீரமைக்கும் பணி தீவிரம்..!

2 Min Read

விழுப்புரம் – புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் பாலங்கள், சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையேயான 186 கி.மீ, துார நான்கு வழிச்சாலை திட்டத்தில், முதல்கட்டமாக, விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு முதல், புதுச்சேரி எம்.என்.குப்பம் வரை 29 கி.மீ, தொலைவிற்கு சாலை பணிகள் முடிந்து, தற்காலிகமாக வாகனங்கள் சென்று வருகின்றன.

விழுப்புரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை – பழுதுகள் சீரமைக்கும் பணி தீவிரம்

அதில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் மற்றும் வளவனுார் பைபாஸ் சந்திப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் ரவுண்டானா மேம்பாலம் தொடங்கி, கெங்கராம்பாளையும் வரை அமைத்துள்ள பைபாஸ் சாலையில் ஜானகிபுரம், சேர்ந்தனுார்,

கோலியனுார் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் மற்றும் சாலைகளில் சிறு பள்ளங்கள் மற்றும் விரிசல் ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதில், ஜானகிபுரம் மேம்பாலம் (புதுச்சேரி மார்க்கம்) புதிய சிமென்ட் சாலையில், 10 மீட்டர் அளவில் வெட்டி எடுத்து ‘கான்கிரீட் பேட்ஜ்’ போடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை ”பேட்ஜ் ஒர்க்”

இந்த நிலையில், கோலியனுார் பாலத்தில் பக்கவாட்டு சுவரை அகற்றி, கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்துடன், சாலை இணையும் சில இடங்களில் ‘பேட்ஜ் ஒர்க்’ நடந்துள்ளதால், வாகனங்கள் செல்லும் போது சத்தமும் எழுகிறது.

இதனால், சாலை தரமாக அமைக்கவில்லை என வாகன ஓட்டிகளிடம் அதிருப்தி  எழுந்துள்ளது. இதுகுறித்து, நகாய் திட்ட அதிகாரிகள் கூறும் போது, ‘விழுப்புரம் – நாகை நான்கு வழிச்சாலையை அமைக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனம், பணியை முடித்தவுடன் 15 ஆண்டுகள் பராமரிப்பதும் அந்த நிறுவனத்தின் பொறுப்பு ஆகும்.

வாகன ஓட்டிகள் அதிருப்தி

3 மாதங்களுக்கு ஒருமுறை நகாய் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குழுவினர் சாலையை ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகள், மேடு பள்ளங்கள் குறித்தும், சைன் போர்டு, மின் விளக்கு மற்றும் சைடு சுவர்களில் ஏற்படும் பழுதுகளை சுட்டிக்காட்டி, சீரமைக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிக்கையளிப்பர்.

போலீஸ் தரப்பிலும் சில சீரமைப்புகள் செய்ய அறிவுறுத்துவர். அதனை ஏற்று ஒப்பந்த நிறுவனத்தினர் சீரமைப்பர். அதன்படி தற்போது சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதுபோன்ற குறைகளை ஒப்பந்த நிறுவனமும் கண்டறிந்து சரி செய்வர்.

சிறு பள்ளங்கள் மற்றும் விரிசல் ஏற்பட்ட இடங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

அதன்படி, தற்போது மேம்பாலங்களில் அமைத்துள்ள இரும்பு கைப்பிடி சுவரை அகற்றி, கான்கிரீட் சுவராக அமைத்து வருகின்றனர். கல்வெர்ட் பகுதியில் பாதுகாப்பு கல் பதிப்பது, சைடு வாய்க்கால் அமைப்பது, மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.

சாலையின் ஏற்றத்தாழ்வுகளும் சரி செய்து இறுதிக்கட்ட பணிகள் முடித்து, சாலையின் கட்டமைப்பு தரத்தை ஆய்வு செய்த பிறகே பயன்பாட்டுக்கு விடப்படும்’ என்றனர்.

Share This Article

Leave a Reply