மாணவியர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் பாராட்டு

1 Min Read
மாணவியர்களுடன் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள்; பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக இல்லங்களில் தங்கி 10-ஆம்  வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து  அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் சி.பழனி அவர்கள் பாராட்டி புத்தகப்பையினை பரிசாக வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு இளைஞர் நீதி சட்டம் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015 கீழ் பதிவு பெற்று 5 குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றது. அதில் அரசு குழந்தைகள் இல்லம் ஒன்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக நான்கு குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றது. குழந்தைகள் இல்லங்களில் அதில் 55 ஆண் குழந்தைகள் மற்றும் 58 பெண் குழந்தைகள் என 113 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் எங்கள் வீடு சிறுவர் இல்லம் கிருபாலாயா குழந்தைகள் இல்லம் கருணை கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்ற 19 பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக 19 குழந்தைகளுக்கு ரூ.10ää232 மதிப்பிலான புத்தகப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.
12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியர்களிடம் உயர்கல்வி தொடர்ந்து பயில வேண்டும். தங்கள் உயர்கல்விக்கு அரசால் வழங்கப்படும் இடஒதுக்கீடு மற்றும் மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து எடுத்துரைத்ததுடன். பெண் பிள்ளைகள் கல்வி பயின்றால்தான் சமூகம் முன்னேற்றம் காணும். எனவே நீங்கள் அனைவரும் உயர்கல்வியினை நல்ல முறையில் படித்து உயர்ந்த நிலையினை அடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து குழந்தைகள் இல்லத்தின் 3 நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கேடயத்தினை பரிசாக வழங்கினார்.

Share This Article

Leave a Reply