விழுப்புரம் அருகே வீட்டை பூட்டி மனைவி, பிள்ளைகள் மீது கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் கையில் கோரிக்கை போஸ்டரை வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை எழுப்பி விசாரணை நடத்தினர்.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது வலுக்கட்டாயமாக போலீசார் எழுப்பி விசாரணை நடத்தியதில், வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவர் கூலி தொழிலாளி, இவரது மனைவி கெஜலட்சுமி தம்பதி என்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரித்ததில் வெங்கடேசன் கூறுகையில்;- எங்களுக்கு கீர்த்திவாசன், ரித்திக்வாசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

எனது உறவினர் ஒருவருடன் வீட்டு மனை நிலம் அபகரிப்பு புகார் முறையீடு தொடர்பாக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் அனந்தபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, எதிர்தரப்புக்கு ஆதரவாக எனது மனைவி, பிள்ளைகளை கடந்த மே 12 ஆம் தேதி, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் தாக்கி, பூட்டி கொலை முயற்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இது மனித உரிமை மீறிய செயலாகும். எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் அறிவுரையின் பேரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு சென்றார். இதனால் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.