நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விழுப்புரம் விஷச்சாராயம் விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கடந்த மே 16 ஆம் தேதி விஷச்சாராயம் விற்கப்பட்டுள்ளது.

விஷச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 44 மதுபிரியர்கள் வாங்கி அருந்திய நிலையில் சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விஷச்சாராயம் குடித்த 44 பேரும் முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி 14ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், சாராய வியாபாரி அமரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். மேலும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களை நேரடியாக சந்தித்து முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் 15ம் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கம், திண்டிவனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ மூர்த்தி, மலர்விழி, மன்னாங்கட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதை தொடர்ந்து 16ம் தேதி சிகிச்சையில் இருந்த விஜயன், கேசவ வேலு, சங்கர், விஜயன், ஆபிரகாம், சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால், விஷச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இதனை தொடந்து 17 ம் ராஜவேல் என்பவரும் இன்று கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னதாக விஷச்சாராயம் குடித்து பலியானோர் விவகாரம் தொடர்பாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர்கள் தீபன்,சீனுவாசன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா, உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.