தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளதுசுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முற்பட்டபோது ஒரு சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சுதா என்பவரை காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்தினால்தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர்.

சுரேஷ் மனைவி சுதா கொடுத்தபுகாரின் பேரில்கிராமத்தை சேர்ந்த 25 பேர் மீது SC / ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது போலீஸ்.
வழக்கு நீதிமன்றத்தில்13 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறதுஇந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு என்னிடம் வரி வாங்கவில்லை தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி காவல் நிலையத்தில் ( சாதி மறுப்பு திருமணம் செய்து 13 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு எதிராக வழக்கு நடத்திய சுரேஷ் அவரது மனைவி சுதா ) புகார் அளித்துள்ளார்.

இதனால் காவல் துறையினர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் தனிபட்ட ஒரு நபரால் தங்கள் கிராமத்தின் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கோவிலில் தயார் செய்திருந்த பாயாசத்தில் பூச்சி மருந்தை கலந்து ஒட்டுமொத்த கிராம மக்களும் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனைவரும் முயன்றுள்ளனர்.
கிராம மக்கள் ஒன்றிணைந்து பூச்சி மருந்து கலந்த பாயாசத்தை குடிக்க முயன்றதை காவல்துறை தடுக்க முயன்றுள்ளனர்.இருப்பினும் ராமு, கவிதா, அமுதா, அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய ஆறு பேர். குடித்துள்ளனர்.
இதனால் பதறிப்போன கிராம மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த பெண்களை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நடைபெற்ற சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.