திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி மலை பகுதியில் இருந்து அனுமதியின்றி மண் எடுத்து கொண்டு ஏரி மின்னூர் வழியாக நாள் ஒன்றுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் அதிக வேகமாக மண் ஏற்றி செல்வதால் அச்சாலை வழியாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தினந்தோறும் விபத்துக்குள்ளாகின்றனர். இதனால் இச்சாலை வழியாக மண் ஏற்றி செல்ல வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இச்சாலை வழியாக மண் ஏற்றி செல்வதில்லை என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினரோ அல்லது வருவாய் துறை அதிகாரிகளோ ஒருவர் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.