விதவை சான்று கேட்டு வந்த இருளர் பழங்குடி பெண்ணுக்கு, செல்போன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சங்கீதாவிடம் செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், அதன் பிறகு சங்கீதாவின் செல்போன் எண்ணில் அடிக்கடி தொடர்பு கொண்டு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதனால் சங்கீதாவிடம் அவரது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், அதன் பிறகு விதவை உதவித் தொகைக்கான சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்துள்ளார். இது தொடர்பாக சங்கீதாவுக்கு அடிக்கடி செல்போன் மூலம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய தாஸ் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் மனு தெரிவித்தனர். பின்வருமாறு;

கண்டாச்சிபுரம் அருகே இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்ட் செய்து, கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே நல்லாபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம் பெண். இவரது கணவர், கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில், இவர் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித்தொகை வழங்க கோரி நல்லா பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் என்பவரை அணுகி விண்ணப்பித்துள்ளார்.

இந்த சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட நிலையில் ரூபாய் 3000 வழங்கி இறப்புச் சான்றிதழை பெற்றுள்ளார். மேலும் விதவை சான்றிதழ் கொடுக்க இளம்பெண்ணுக்கு வி.ஏ.ஓ ஆரோக்கியதாஸ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். அவரிடம் செல்போனில் பேசிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாசை சஸ்பெண்ட் செய்து, கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.