விக்கிரவாண்டி 82.48% வாக்குகள் பதிவு; ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

2 Min Read
வாக்களிக்கும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி மரண மடைந்தார். இந்நிலையில் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதிகளை அறிவித்தது.

- Advertisement -
Ad imageAd image

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க தேர்தலில் போட்டியிட வில்லை. இவர்களையும் சேர்த்து சுயேச்சையாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதும் 552 வாகுப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. தேர்தல் பணியில் 1,355 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

82.48% வாக்குகள் பதிவு;

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு வந்திருந்த வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலரால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இறுதியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவு நிறைவு:

82.48 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு முடிவில், 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிலில் வந்து ஜனநாயக கடமை ஆற்றிய மூதாட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், தள்ளாத வயதில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை கட்டிலுடன் தூக்கி வந்து அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்ற செய்துள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், தள்ளாத வயதில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை கட்டிலுடன் தூக்கி வந்து அவரது ஜனநாயக கடமையை நிறைவேற்ற செய்துள்ளனர்.

விக்கிரவாண்டியில் மாலை 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்கள் வாக்களிப்பு
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தாலும், சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களித்தனர்.பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

Share This Article

Leave a Reply