விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அதை அங்கிருந்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் சமூக வலைதளத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ஆனது விழுப்புரம் மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அவசர சிகிச்சை பிரிவில் 2 மணி நேரம் திடீரென மின்சாரம் நின்றதால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மருத்துவமனையில் அவசர நேரங்களில் ஜெனரேட்டர் வசதி கூடம் இல்லை என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாததை, அதை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் அந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.