விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – உதயநிதி ஸ்டாலின் 3 நாள் பிரச்சாரம்..!

2 Min Read

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு ஜூலை 6,7,8 ஆகிய 3 நாட்கள் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. அவர் அப்பதவியில் இருக்கும் போதே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

விக்கிரவாண்டி இடைதேர்தல்

அந்த தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் புகழேந்தியே மீண்டும் போட்டியிட்டார். இம்முறை வெற்றி பெற்றார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் புகழேந்தி. சமீபத்தில் புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்

பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவர் மறைந்தாலோ அல்லது அவர் வகித்திருக்கும் பதவியை ராஜினாமா செய்தாலோ அந்த தொகுதியில், ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும் என்பது நாம் அறிந்ததே.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

திமுக

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 24 ஆம் தேதி நடைபெறும். இந்த மனுக்களை திரும்ப பெற வரும் 26 ஆம் தேதி கடைசி நாள்.

அன்றே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு, பல கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, சக்கரபாணி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஜூலை 6,7,8 ஆகிய 3 நாட்கள் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Share This Article

Leave a Reply