விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 64 பேர் வேட்பு மனு தாக்கல்..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். புகழேந்தி மறைவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

அதேசமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தேமுதிகவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 64 பேர் வேட்பு மனு தாக்கல்

இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடையும். அதன்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் 3 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையம்

வருகிற ஜூன் 24 ஆம் தேதி இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 26 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு கடைசி நாள்.

மேலும், இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Share This Article

Leave a Reply