துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருந்தார் அஜித். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து விலகினார்.
இந்நிலையில், ஏகே 62 படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் விளக்கம்:
‘போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குநரான விக்னேஷ் சிவனுக்கு, நானும் ரவுடிதான் படம் தான் நலல் அடையாளம் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் நயன்தாராவுடன் காதல், கல்யாணம் என நல்ல வாழ்க்கையையும் கொடுத்தது. இந்நிலையில், கடந்தாண்டு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து அஜித்தின் ஏகே 62வில் கமிட் ஆனார்.

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இதன் நடுவே தான் விக்கி – நயன் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆகிறதா என அஜித் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. ஆனால், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித், ஏகே 62வில் இருந்து விலகியது ஏன் என விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஏகே 62 படத்தின் வாய்ப்பு பறிபோனது சற்று ஏமாற்றம்தான். இதில் அஜித் சார் பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

அதேபோல், ஏகே 62 படத்தை இயக்கவுள்ள மகிழ் திருமேனிக்கும் விக்னேஷ் சிவன் வாழ்த்துக் கூறியுள்ளார். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு தற்போது மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது. இந்த படம் மகிழ் திருமேனி கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என பேசினார். மேலும், அந்தப் படத்தை ஒரு ரசிகனாக நானும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளார் என விக்னேஷ் சிவனே உறுதிசெய்தும் கூட, இன்னும் லைகா தரப்பில் இருந்து அப்டேட் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவனின் இந்த விளக்கத்தை கேட்ட ரசிகர்கள், அஜித்துடன் அவருக்கு பிரச்சினை இல்லையென்றால், தயாரிப்பு நிறுவனம் அவரை நீக்கிவிட்டதா என கேட்டு வருகின்றனர். ஏகே 62 ட்ராப் ஆனதால், பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.