அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் இன்று அதிகமானோர் பணி ஓய்வு பெற்றார். இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி.

இவர் தனது ஓட்டுநர் பணி இன்றுடன் ஓய்வு பெறுவதன் காரணமாக தான் இத்தனை ஆண்டுகளாக பொதுமக்களை ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்த அரசு பேருந்தை தான் பணி ஓய்வு பெரும் நாளில் இயக்கி கடைசியாக அதனை வணங்கி முத்தமிட்டு அரசு பேருந்தை கட்டித் தழுவி கண்ணீர் ததும்ப அரசு பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற திருமணம்., சமூகத்தில் மதிப்பு., கிடைத்த பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். மேலும்., ஓய்வுபெருவதுடன் சக ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து பேசிய காட்சிகள் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று பணி ஓய்வு பெற்ற முத்துப்பாண்டி மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31-A பேருந்தை இயக்கியது இன்று கடைசி நாள் என்பதால் தான் ஓட்டிய அரசு பேருந்தை கட்டித்தழுவி முத்தமிட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.