தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார், இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய 30 வயதான பெண் ஒருவர் தனது குடும்பம் கஷ்டத்தில் உள்ளதாகவும்,எனக்கு ரூபாய் 15,000 கொடுத்து உதவி செய்தால் பணத்தை சில மாதங்ககளில் திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார் .
அதற்கு அந்த முதியவர் நான் பணம் கொடுக்க வேண்டும் என்றால் எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும் என தெரிவித்தார், என்ன உதவி என்று அந்த பெண் கேட்டபோது எனக்கு மனைவி இல்லை என்பதால் என்னிடம் நீ உல்லாசமாக இருந்தால் போதும் பணத்தை திருப்பி தர வேண்டாம் என கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வட்டிக்கு பணம் கடனாக கேட்டால் அதற்கு இப்படியா பேசுவது எனக்கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இருப்பினும் அந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றார், அப்போது அந்தப் பெண் பண உதவி கேட்டால் இப்படித்தான் தகாத வார்த்தைகளை பேசுவீர்களா என கூறினார், அப்போது அந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திடீரென அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து கட்டி அணைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார், இதையடுத்து அவர் வீட்டிலிருந்து சென்றுவிட்டார், நடந்த விபரங்களை எல்லாம் தனது வீட்டில் உள்ளவர்களிடம் அந்த பெண் கூறியுள்ளார் .
இதையடுத்து அந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மீண்டும் வீட்டுக்கு வந்தால் அவற்றையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
எதிர்பார்த்தபடியே அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அவரிடம் தகாத முறையில் நடந்துளார் . அவரது செயல்பாடுகளை எல்லாம் தனது செல்போனில் பதிவு செய்த அந்த பாதிக்கப்பட்ட பெண் , இந்த வீடியோ பதிவினை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார் .
மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்று தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.