பொள்ளாச்சி
அருகே சீ.மலையாண்டி
பட்டினம்
கிராமத்தில் பட்டியலின பெண்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய கொடுமை நடவடிக்கை எடுக்க கோரி கோமங்கலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்.
பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு.
பொள்ளாச்சி அருகே உள்ள சீ மலையாண்டிபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் இவரது மனைவி சீத்தம்மாள்
கடந்த ஒரு மாதமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீத்தாலட்சுமி, கணவர் கார்த்திக்,இருவரும் சேர்ந்து சுய உதவிக் குழுவில் ரூபாய் 50,000 கடன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் குழுவில் பெற்ற கடன் தொகையை கேட்டு நல்லாம்பள்ளியை சேர்ந்த துளசிமணி அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலர் சீத்தாலட்சுமியிடம் கடன் தொகையைக் கேட்டு
மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதே போல் இன்று அங்கு வந்த அவர்கள் சீத்தாலட்சுமியிடம் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அப்போதுஇரு தரப்பு பெண்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்த மருதமுத்து சீத்தாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாள் உள்ளிட்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டியிலின பெண்கள் மீது மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து
தமிழகத்தில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முறையாக வழக்குகள் பதிவு செய்வதில்லை எனவே தமிழக அரசு உடனடியாக பட்டியலின பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.