தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. முதல் மந்திரி யார் என்பது காங்கிரஸ் மேலிடம் விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உதயமான 2014 ஆம் ஆண்டில் இருந்து அங்கு பாரதராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருந்து வந்தார். தெலுங்கானாவே தனது கோட்டையாக மாற்றி வைத்திருந்தார். இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அவரது எண்ணம் பலிக்கவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் 65 இடங்களில் வெற்றி பெற்றது. சந்திரசேகர ராவ்வின் பாரதராஷ்டிர சமதி கட்சிக்கு 39 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

சந்திரசேகர ராவ்வின் கோட்டையை தகர்த்ததில் முக்கிய பங்கு வகித்தனர். தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி. இந்த தேர்தலில் அவர் கோடங்கள் காமா ரேட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கோடங்கள் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி வேட்பாளரை 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ரேவந்த் அண்ணா ஜிந்தாபாத் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து ரேவந்த் ரெட்டி இல்லத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கூறினார்.

ரேவந்த் ரெட்டியுடன் கர்நாடக துணை முதல் மந்திரி பி.கே சிவக்குமார் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றனர். கவர்னரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் டி.கே சிவக்குமார் கூறுகையில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். புதிய சட்டசபையில் எங்களுக்கு 65 உறுப்பினர்கள் உள்ளனர் என்றார். முன்னதாக ஆட்சியை இழந்த சந்திரசேகர ராவ் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவர் அனுப்பி வைத்தார். இந்த ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் வென்றுள்ள போதிலும் குதிரை பேரம் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் படுவேகமாக ஆட்சி அமைக்க தீவிர காட்டியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நேற்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல் மந்திரி வேட்பாளரை தேர்ந்தெடுக்க இந்த கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி தான் முதல் மந்திரியாக வருவார் என கூறப்பட்டாலும், இதில் மேலும் ரெண்டு பேரின் பெயர்கள் அடிப்பட்டன. அதன்படி, சந்திரசேகர ராவை தோற்கடிக்க தீவிரப் பிரச்சாரத்தில் களமிறங்கிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் விக்ர மார்க்க மல்லு தெலுங்கானா பிரிவின் தலைவர் உத்தம்குமார் ரெட்டி ஆகியோர் பெயர்களும் முதல் மந்திரி வேட்பாளருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த தொடர்பான முடிவு காங்கிரஸ் மேலிடம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.