- வெங்கடு சுப்பையா சுவாமிகள் 156 வது குருபூஜை- 156 கிலோ எடை கொண்ட சோற்றில் சிலை அமைத்து பக்தர்கள் வினோத வழிபாடு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நல்வழி கொல்லை நல்வழி சித்தர் மடத்தில் மகான் வெங்கிடு சுப்பையா சுவாமிகளின் 156 வது ஆண்டு குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று மாலை 6:00 மணி முதல் துவங்கி நடைபெற்றது .இன்று இரண்டாவது நாளாக மகா சித்தர் வெங்கிடு சுப்பையா சுவாமிக்கு 156 கிலோ எடையில் சிலை அமைத்து சிலையில் கண், காது, மூக்கு உள்ளிட்ட உடல் பாகங்களை காய்கறிகளைக் கொண்டு வடிவமைத்து தீபாராதனை செய்து வினோத வழிபாடு நடத்திய நிகழ்வு பக்தர்களை பரவசமடையச் செய்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்வழி சித்தர் செய்திருந்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.