6 பேரிடம் டி.என்.ஏ சோதனை முடியுற்ற நிலையில்,வேங்கைவயல் வழக்கில் மேலும் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்தது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில், குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், 186 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். இவ்வழக்கில் 26 நபர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவரவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்பேரில், சிறுவன் உட்பட மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட இருந்தது. இதில் ஒருவரது உடல்நிலை சரியில்லாததால், மற்றவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதன் மாதிரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, சென்னையில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இதனிடையே, வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை, ஒரு நபர் ஆணையம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
இதுவரை 153 சாட்சிகளை விசாரித்துள்ளனர். அதில் 7 போலீசாரும் அடங்குவர். நேரடி சாட்சிகள் இந்த வழக்கில் இல்லாத நிலையில் அறிவியல் பூர்வமான சோதனையில் இறங்கியுள்ளனர்.அந்த வகையி டி.என்.ஏ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்தம் சேகரிப்பு
வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஒரு சிறுவன் உட்பட 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.தொடர்ந்து இது 26 பேரிடம் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் இது வரை எந்த முடியும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் மலத்தை கொண்டு டிஎன்ஏ பரிசோதனை நடத்துவது சரியான தீர்வாக இருக்காது என்றும், இந்த விசாரணை கண் துடைப்பாக மட்டுமே நடைபெற்று வருகிறது என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார்.இன்னமும் முடியு எட்டப்படாமல் இருக்கிறது வேங்கைவயல் பிரச்சனை.
Leave a Reply
You must be logged in to post a comment.