வீரப்பனின் கடைசி கூட்டாளி மீசை மாதையன் மரணம்.31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.

1 Min Read
வீரப்பன் மீசை மாதையன்

கடந்த 31 ஆண்டுகளாக கர்நாடக சிறைகளில் இருந்த வீரப்பனின் முக்கிய கூட்டாளியான மீசைக்கார மாதையன்  நேற்று மரணம்.விடுதலை வேண்டி நீதிமன்றத்தை நாடியது பதில் இல்லாமலே போனது.

- Advertisement -
Ad imageAd image

1993 ம் ஆண்டு மாதேஸ்வரன் மலையில் உள்ள பாலாறு பாலத்தை சந்தனக் கடத்தல் வீரப்பன் தகர்த்த வழக்கில் மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப் பிரகாசம் ஆகிய நால்வரும் கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம்

மீசை மாதையன் 1993ஆம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பி வந்து கர்நாடக போலீசில் சரணடைந்தார். விசாரணை முடிவில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றியது. அதை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார். சமூக ஆர்வலர்களின் போராட்டத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மாதையன்

அவர்கள் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்து, ஆயுள் தண்டனையாக மாற்றியது. 2018 மே மாதம் சைமன் என்பவரும், 2022இல் பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரியில் ஞானபிரகாசம் பரோலில் வெளியே வந்தார். 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மீசை மாதையன் நினைவு திரும்பாமலே  உயிரிழந்தார்.

மிக நீண்ட சட்டப்போராட்டம் வெற்றியடையாமலே போனது மாதையன் வழக்கில்,

Share This Article

Leave a Reply