அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது,
இதனையடுத்து தஞ்சையை அடுத்த மறியல் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அப்போது பாஜக தஞ்சை மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவிக்க பேரணியாக வந்தனர், அப்போது எதிர்புறம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவிற்கு எதிராக வெளியேறு வெளியேறு என்று கோஷம் எழுப்பினார்கள், இதனால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர், பின்னர் பாஜகவினர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்
தஞ்சை : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக வினர்க்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக

Leave a Reply
You must be logged in to post a comment.