வள்ளலார் பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்..!

2 Min Read

வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கூடாது என்று கூறி பெரும் ஆலோசனைக் கூட்டம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநிலம் தழுவிய கூட்டம். மேலும் 1 மணிக்கு தீர்மானம் வாசிப்பு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு.

- Advertisement -
Ad imageAd image

வடலூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வடலூர் ஞானசபை பெருவெளியில் தமிழக அரசு சர்வதேச மைய கட்டிடம் அமைப்பதை எல்லோரும் எதிர்த்து நகரத்தில் 16.03.24 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்ற பொதுகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

வள்ளலார் பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

தீர்மானம் – 1

வடலூர் பார்வதிபுரத்தில் அமைந்துள்ள வள்ளலார் ஞானசபை பெருவெளியில் தமிழக அரசு சர்வதேச மைய கட்டிடம் கட்டுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் – 2

கடந்த 1865 ஆம் ஆண்டு வள்ளலார் ஏற்படுத்தப்பட்ட வடலூர் தலைமை சன்மார்க்க சங்கமே உண்மையான தலைமை சங்கம். தற்போது உள்ள வடலூர் தலைமை சன்மார்க்க சங்கம் வள்ளலார் சங்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதால் இந்த சங்கத்தை கலைக்க வேண்டும் என தீர்மானிக்கபடுகிறது.

வள்ளலார் பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

தீர்மானம் – 3

வடலூர் வள்ளலார் அருள் நிலையத்திற்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்திற்கு மேல் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. சுமார் கடந்த 85 ஆண்டு காலம், தமிழக அரசின் கட்டுபாட்டில் இந்த ஞானசபை பெருவெளி இருந்த போதும் இதுவரை மீட்கபடாததையை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் – 4

வடலூர் ஞானசபை பெருவெளி நகரத்தை புனித நகரமாக அறிவித்து மது, மாமிச கடைகளை அகற்ற வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

வள்ளலார் பக்தர்கள் ஆலோசனைக் கூட்டம்

தீர்மானம் – 5

வடலூர் பெருவெளி சர்வதேச மையத்தை வேறு இடத்தில் அமைக்கவும் இந்த கூட்டம் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் – 6

வடலூர் பெருவெளியை காப்பதற்கு ஒவ்வொரு மாத பூச நாளிலும் நாம் அனைவரும் ஒன்று கூடுவது எனவும் அதன் முதற்கட்டமாக வரும் 20.03.24 அன்று மாத பூச நாளில் எல்லோரும் வடலூர் பெருவெளியில் கூடுவது என தீர்மானிக்கப்பட்டது.

Share This Article

Leave a Reply