கோவில்பட்டியில் காவல்துறையினர் உதவியுடன் நடக்கும் கந்து வட்டி தொழில்..!

2 Min Read

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காவல்துறையினர் உதவியுடன் நடக்கும் கந்து வட்டி தொழில். நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே வட்டிக்கு விட்ட அவலம். அங்கு இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தூத்துக்குடி மாவட்டம், அடுத்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டி. இவர் கந்து வட்டி கும்பல் கொடுத்த தொலலை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கந்து வட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக ஆறுமுக பாண்டி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், அடுத்த கோவில்பட்டி பகுதியில் காவல்துறை ஒத்துழைப்புடன் கந்து வட்டி கும்பல் செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து தருவதால் உயிர் பலிகள் தொடரும் சூழ்நிலை உள்ளது.

கந்து வட்டி கும்பல் மீது கைது செய்ய உறவினர்கள் போராட்டம் 

பின்னர் காவல்துறையின் ஒத்துழைப்பு மற்றும் அலட்சியம் காரணமாக கந்து வட்டி கும்பல் சுதந்திரமாக செயல்பட்டு வரும் நிலை இருப்பது குறித்து செய்திகள் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பாண்டி என்பவர் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக பாண்டிக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது ஆறுமுக பாண்டி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக காவலர் பாண்டியுடன் பேசிய உரையாடல் ஆடியோ தற்போது வெளியாக உள்ளது. அந்த ஆடியோவில் கந்து வட்டி கும்பல் தனக்கு கொடுக்கக்கூடிய தொந்தரவு குறித்தும், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் போலீசார் அலட்சியம் காட்டுவது குறித்தும் பேசி உள்ளார். அப்போது அதுமட்டுமல்லது காவலர் பாண்டி கொடுத்த பணம் மற்றும் வட்டி குறித்து கேட்பது தொடர்பாக அந்த ஆடியோவில் உள்ளது.

காவலர் பாண்டியுடன் பேசிய உரையாடல் ஆடியோ

இதனால் கந்து வட்டி கும்பலை தடுக்க வேண்டிய காவல்துறையினைச் சேர்ந்தவரே மற்றவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளது அந்த ஊர் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது இதன் மூலமாக உறுதியாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையே வட்டிக்கு விட்ட அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply