மத்திய அமைச்சர் குமாரசாமியின் மூக்கில் வடிந்த ரத்தம்.காரணம் என்ன?

2 Min Read
ரத்தத்துடன்

பெங்களூரில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் எச்.டி குமாரசாமி பேசியபோது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்புக்கு அவர் எடுத்து வரும் Blood Thinner மாத்திரை தான் காரணமா? என்பது பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது. கர்நாடகாவில் ‛மூடா’ எனும் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளாக உள்ள பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த 2 கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில் தான் மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி வருகின்றன. இதுபற்றி ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டசபையில் விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மூடா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
குமாரசாமி

பெங்களூரில் இருந்து மைசூரு வரை அவர்கள் பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பெங்களூரில் இன்று பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேடிஎஸ் மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பாஜக மாநில தலைவரான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் குமாரசாமி, முதல்வர் சித்தராமையாவை முறைகேட்டுடன் தொடர்புப்படுத்தி பேசி வந்தார். அப்போது திடீரென்று அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து சிறிய துண்டை வைத்து மூக்கை பொத்தியபடி குமாரசாமி காரில் ஏறி ஜெயநகரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குமாரசாமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பெங்களூருவில் இருந்து மைசூர் வரை மக்களை சந்தித்து பாதையாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

Share This Article

Leave a Reply