Ulundurpet : விசிக நிர்வாகியை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர் கைது..!

1 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன் (49). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (45) என்பவர் அவருடைய மனைவி பார்வதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக சூசைநாதன் சின்னதுரையை கூப்பிட்டு ஏன் இப்படி உன் மனைவியிடம் தகராறு செய்து வருகிறாய் என கேட்டு அவரை கண்டித்துள்ளதாக
தெரிகிறது.

எலவனாசூர் போலீசார் விசாரணை

இந்த நிலையில் இரவு சூசைநாதன் தனது வீட்டின் முன்பு கட்டில் போட்டு படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அதிகாலையில் அங்கு சென்ற சின்னதுரை பெட்ரோலை சூசைநாதன் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்து உள்ளார்.

அதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த சூசைநாதன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ளார்.

விசிக நிர்வாகியை உயிரோடு தீ வைத்து எரித்த வாலிபர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எலவனாசூர் போலீசார் சின்னதுரையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் ஏன் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என கேட்டு கண்டித்து அடித்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.

முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply