உடுமலை-திருப்பூர் மாவட்டம்: குருமலையில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த சோகம்.

1 Min Read
குருமலை

உடுமலை
திருப்பூர் மாவட்டம்: உடுமலை அருகே குருமலையில் சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டிதூக்கிவந்த மலைவாழ் இனத்தை சார்ந்தவர்  பழனிச்சாமி என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்த சோகம்.

- Advertisement -
Ad imageAd image
குருமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குருமலை பகுதியில் ஏராளமான மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் மருத்துவ தேவை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 5 கிலோ மீட்டர் தூரம் காட்டுப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

குருமலை

இந்நிலையில் நேற்று குறுமலையைச் சேர்ந்த பழனிச்சாமி வயது (37) என்பவரை உடல்நிலை சரியில்லாத காரணத்தால்,மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றனர். பின்பு திருமூர்த்தி மலையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். அவரது உடலை குருமலைக்கு திரும்ப எடுத்துச் செல்ல முடியாததால் திருமூர்த்தி மலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் பழனிச்சாமிக்கு 15 வயதில் மாரியப்பன் என்ற மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply