சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளையொட்டி இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 72 இணையர்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.
திருமணம் செய்து கொண்ட 72 இணையர்களுக்கும் தங்கத்தால் ஆன தாலி மற்றும் பீரோ, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், பாத்திரங்கள் அடங்கிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இது தவிர 72 ஜோடிகளுக்கும் கைக்கடிகாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
பின்பு மணமக்களை வாழ்த்தி பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சேகர் பாபு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1700 க்கும் அதிகமான திருமணங்களை அவரது இந்து அறநிலை துறை சார்பாக நடத்தி வைத்துள்ளார் என்று பேசினார் .
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், உடனே குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், ஆனால் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்று மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார் . நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதைக்கூட ஒன்றிய அரசு கண்காணித்துக் கொண்டிருக்கிறது என ஆளும் பாஜக அரசை கேலி செய்த பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மக்கள்தொகை எண்ணிக்கை குறைப்பை பின்பற்றிய தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் தண்டனை தான் தொகுதி மறுவரையறை என்று பேசினார் .
மக்கள்தொகை விழிப்புணர்வு பெறாத மாநிலங்கள் அதிக தொகுதிகளை பெறும் சூழல் உள்ளது.தொகுதிகள் குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதில் பாதிப்பு ஏற்படும் . என்று தெரிவித்தார் .
மேலும் அவர் பேசுகையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எண்ண்ற்ற திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்து வருவதாகவும் , செயல்படுத்த முடியாத திட்டம் என பலரும் தெரிவித்த மகளிர் உரிமை தொகை திட்டத்தையும் செயல்படுத்தி காட்டியவர் தமிழக முதலமைச்சர் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.