அரக்கோணத்தில் 5 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சென்னையை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது .
அரக்கோணத்தில் தொடர்ந்து ஐந்து வீடுகளில் கைவரிசை காட்டிய இருவர் கைது . கைது செய்யப்பட்ட இருவரும் மேலும் பல தொடர் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது .
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி அன்று தொடர்ந்து ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை குறித்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் திருட்டுச் சம்பவம் நடந்த வீடுகளில் தடயங்கள் , சம்பவம் நடந்த போது அந்த பகுதியில் ஆக்டிவாக இருந்த மொபைல் எண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து , தடயங்களை சேகரித்த காவல்துறையினர் அதன் அடிப்படையில் சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா 19, காஞ்சிபுரம் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண் என்கின்ற சரண்குமார் 18 ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிராமப்புற பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படாததால் அப்பகுதிகளை தேர்வு செய்து ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் பூட்டை உடைத்து திருடுவதாக தெரியவந்தது.

மேலும் அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து ஐந்து வீடுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்து காவல் துறையினர் மேலும் வேறொரு திருட்டு சம்பவங்களில் இவர்களின் கைவரிசை உள்ளதா என விசாரணையை தீவிர்படுத்தி உள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.