குஜராத் மாணவி கற்பழிப்பு , ஆன்லைன் புகார் மூலம் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது .

2 Min Read
அஷீஷ் ஜெயின் - ஜெரோம் கதிரவன்

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட இந்த இரண்டு மாணவர்களும் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து , தனித் தனியே பாலியல் வல்லுனர்வு செய்துள்ளனர் .

- Advertisement -
Ad imageAd image

மதுரையில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொல்வதற்க குஜராத்திலிருந்து வந்திருந்த சார்ட்டர்ட் அக்கவுண்ட் மாணவி இரண்டு தமிழக இளைஞர்களலால் பரிதாபமாகக் கற்பழிக்கப்பட்டுள்ளார் .

மயக்கமருந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்துள்ள நிலையில் , தற்பொழுது ஆன்லைன் மூலம் புகார்  செய்ததின் பேரில் , அந்த இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்ளத் தமிழகம் வந்துள்ளார் . அவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஒரு தனியார் விடுதியில் அரை எடுத்துத் தங்கியுள்ளார் .

கருத்தரங்கிற்காக வந்து அதே விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில், மாணவி மதுரையில் தங்கியிருக்கும்போது திடீரென்ற உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது .  இதனால் அந்த மாணவி , இந்த இரண்டு இளைஞர்களிடம் தனக்கு உணவு மற்றும் மருந்து வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார் . இந்த சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்திக்கொண்ட இந்த இரண்டு மாணவர்களும் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து , தனித் தனியே பாலியல் வல்லுனர்வு செய்துள்ளனர் .

குஜராத் திரும்பிய மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படவே பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார் . மேலும் அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் கற்பழிக்கப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது .

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அகமதாபாத் போலீசில் புகாரளித்து உள்ளார். சம்பவம் நடந்தது மதுரை என்பதால் , அகமதாபாத் காவல்துறையினர் மதுரையிலும் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார் .

ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல்துறை ஆணையருக்கு மாணவி புகார் அளித்து உள்ளார். இதையடுத்து உதவி ஆணையர் காமாட்சி, மாணவியிடம் வாட்ஸ்அப் வீடியோவில் நடத்திய விசாரணையின் மூலம் புகார் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Share This Article

Leave a Reply