டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவர் கைது

1 Min Read
இலங்கை அகதிகள்

கோவையில் டாஸ்மார்க் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து, வாள்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கோவை ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் டாஸ்மாக் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டாஸ்மாக் ஊழியரிடம் இரவில் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை கொண்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூலுவப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணி ராஜ்(எ) நிரஞ்சன்(எ) மாங்கா மற்றும் மிலன் ஆவர். இவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், இரண்டு வாள்கள்(கத்தி), மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply