ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு….

1 Min Read
உயிரிழந்த மாணவர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த தசரதன் வ/20 சந்தோஷ் வ/20 இவர்கள் இருவரும் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் இருவரும் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

இன்று வாலாஜாபாத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தசரதன் மற்றும் சந்தோஷ் மண்ணிவாக்கத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த பொழுது வாலாஜாபாத் வண்டலூர் சாலையில் ஆதனூர் சந்திப்பு அருகே பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி லாரியின் டயர் அடியில் மாட்டி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் தசரதன் மற்றும் சந்தோஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

மேலும் சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply