விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகேயுள்ள வி சாலை கிராமத்தில் நடைபெறவுள்ள தமிழக வெற்றி கழக கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற இரண்டு தொண்டர்கள் , இருவேறு விபத்துகளில் உயிரிழப்பு . மேலும் தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் அருகே கவிழ்ந்து விபத்து .
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கினார் . மேலும் முதல் தேர்தலிலே தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு த.வெ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் தா வெ க கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் , கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் நடத்த திட்டமிட்ட , கடந்த சில நாட்களாக மாநாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
இந்நிலையில், சென்னையில் இருந்து தவெக. மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். சென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது மணல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரிய மேட்டில் இருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மாநாட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே உள்ள சந்திப்பில், மணல் லாரி ஒன்று வலது புறமாக திரும்பி உள்ளது. இளைஞர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மணல் லாரி மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளனர். அப்போது மணல் லாரி இளைஞர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார், மற்றொருவர் மிகவும் ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் சிக்கியவர்கள் கையில் த.வெ.க. கொடி இருந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து ரயில்மூலம் வருகை புரிந்து வருகின்றனர் . இந்நிலையில் இன்று காலை வி சாலை அருகே மாநாட்டு மேடையின் பின்புறம் ரயில் வழித்தடத்தில், ரயில் மெதுவாக சென்ற போது சில இளைஞர்கள் கீழே குதித்து உள்ளனர் . இதில் சென்னையில் இருந்து மாநாட்டுக்காக சென்ற நிதிஷ் குமார் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . படுகாயமடைந்த மேலும் இருவர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் .
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/tvk-party-cadres-refused-to-accept-vijays-request-unfortunate-incident-that-took-place-in-vijays-conference/
மற்றொரு சம்பவம் …
செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலத்தில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக வாகனத்திலிருந்து 11 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
Leave a Reply
You must be logged in to post a comment.