பெரியார் விவகாரம் நிர்மலாவிற்கு TVK தலைவர் VIJAY பதிலடி!

மத்திய அரசு மீதான விமர்சனங்களை மறைப்பதற்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார் என்றால் இது போதாதா அவரைத் தமிழகம் போற்ற ...

2 Min Read
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தால் பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை” என்று தந்தை பெரியாரை மறைமுகமாக சுற்றிக்காட்டி பேசினார் .

- Advertisement -
Ad imageAd image

மேலும் நிர்மலா சீதாராமன் “அவரது போட்டோவை திமுக எம்.பி.க்கள் தங்கள் அறையில் வைத்து வழிபடுகிறீர்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக நாடாளுமன்றத்தில் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்  தனது X பக்கத்தில் ” பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் .

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே… இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?! பெரியார் போற்றுதும்! பெரியார் சிந்தனை போற்றுதும்!” என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply