2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக கொண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கினார் . மேலும் முதல் தேர்தலிலே தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்தோடு த.வெ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் தா வெ க கட்சியின் கொடி மற்றும் பாடல் வெளியிடப்பட்ட நிலையில் , கட்சியின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை கிராமத்தில் நடத்த திட்டமிட்ட , கடந்த சில நாட்களாக மாநாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .
இன்று விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் அவரது கட்சி கொடியின் வர்ணங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து மக்களிடம் நேரடியாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்ததை அடுத்து , ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அதிகாலை முதலே மாநாட்டு பந்தலில் குவிந்து வருகின்றனர் .
விஜயின் கட்டளையை மீறிய தொண்டர்கள் .
கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம்; இரு சக்கர வாகனம் மூலம் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்கவும் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் ஏற்கெனவே கோரிக்கை வைத்த நிலையில் , ஆர்வ மிகுதியால் அவரது கோரிக்கையை , தொண்டர்கள் மீறியதால் மாநாட்டு பந்தலில் பதற்றமான சூழ்நிலை நிலவியது .
தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைப்பு. விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையை தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை.
காலையிலையே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதுவே ஆயிரக்கணக்கில் இருப்பதால் மாலையில் 5 லட்சம் பேர் வரை கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது .
கொஞ்சம் இதையும் படிங்க :http://thenewscollect.com/tamil-nadu-vetri-kazhagam-was-recognized-by-the-election-commission/
இன்றுமாலை 4 மணிக்கு மேல் தான் மாநாடு தொடங்கப்படும் என்ற அறிவித்திருந்த போதும் காலை முதலே ஆயிர கணக்கில் மாநாட்டு பந்தலில் தொண்டர்கள் கூடினர் மேலும் அங்கு கடும் வெயில் நிலவி வருவதால் , தவெக மாநாட்டு திடலில் 80க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
Leave a Reply
You must be logged in to post a comment.