துருக்கியில் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 68.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவே பெரும்பாலானோர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.

துருக்கியில் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 524 அமெரிக்க டாலர். வறுமை கோட்டின் வரம்பு 768 அமெரிக்க டாலர். மார்ச் மாதத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி விகிதங்களை 50% ஆக உயர்த்தியது.

துருக்கியில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இன்னும் மோசமான நாட்கள் வரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.