லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் – லாரி உரிமையாளர்கள் சங்கம்..!

2 Min Read

தமிழகத்தில் இயங்கும் லாரிகளுக்கு, தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திகிறோம். லாரி உரிமையாளர்கள் வரும் 9ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கோவை மாவட்டம், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் என்பவரும், செயலாளர் வெங்கடேஷ் என்பவரும், ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின், தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன. லாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக பாதிப்பு.

லாரிகள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி, உரிமையாளர்கள் சங்கம், மாநில லாரி புக்கிங், ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் வாகன பழுதுபார்ப்போர் சங்கம் என பல்வேறு இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக காலாண்டு வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரிகளை அரசு உடனே திறக்க வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தத்திலும் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர் சங்கம், ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு வரி உயர்வை 40 சதவீதம் அளவில் அரசு உயர்த்தி உள்ளது. லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி இன்று 9 ஆம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் மற்றும் 20 லட்சம் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது என்று கூறினார்.

லாரிகள் வேலை நிறுத்தம்

எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் தங்கள் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்றையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்” என்று கூறினார்.

Share This Article

Leave a Reply