கோவை அருகே உள்ள திருமலையம்பாளையம் அடுத்த பேரூராட்சிக்கு உட்பட்ட குமிட்டிபதி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் என்பவர் (வயது 35). இவர் லாரி டிரைவர். இவர் தனது உறவினர்களான ஜெய்குமரேசன் வயது (32), கணேசன் வயது (35), ஹரி வயது (12) ஆகியோருடன் ஒரு காரில் வேலாந்தவளத்தில் இருந்து நாச்சி பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

பின்பு அந்த காரை கணேசன் ஓட்டி கொண்டிரிந்தார். காரில் வேலந்தாவளம்-நாச்சிபாளையம் ரோட்டில் வழியாக சென்று கொண்டிருந்த போது அடுத்த மாஸ்தி கவுண்டன் பதியில் உள்ள வாத்தியார் தோட்டம் அருகே வந்த கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக டன் கொண்ட சிமெண்ட் குழாய்களை ஏற்றிக்கொண்டு அவ்வழியாக கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரி தீடிரென்று எதிர்பாரத விதமாக அந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் அந்த கார் சுக்கு நூராக நசுங்கியது.
இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சிவராஜ், ஜெய்குமரேசன், கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தனர். படுகாயமடைந்த சிறுவன் ஹரி மீட்கப்பட்டு அந்த பகுதியில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை அளிக்கப்பட்டனர்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த வந்த கே.ஜி. சாவடி போலீசார் அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் என்பவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி போலீசார் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.