மன்னார்குடி அருகே கோட்டசேரி கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான வீட்டில் அவரது மனைவி ஜேன் பெலிக்ஸ் முன்னிலையில் திருச்சி காவல்துறையினர் சோதனை செய்தனர்.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கடந்த 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டிகளை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டார்.

தனியார் யூடியூப் சேனல் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது சேனலில் வெளியிட்டார்.
அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.

யூடியூப் சேனலின் எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில தினங்களாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டசேரி என்னும் கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிக கண்டெய்னர் வீட்டில் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆவணங்கள் ஏதும் வைத்துள்ளார்களா என திருவாரூர் மாவட்ட காவல்துறை துணை கண்காப்பாளர் மணிகண்டன் தலைமையில்,

திருச்சி சோதனை செய்யும் காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி ஜேன் பெலிக்ஸ் அழைத்து வந்து சோதனை மேற்கொண்டனர் முடிவில் எந்த ஆவணங்கள் ஏதும் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.