பொன்னேரி அருகே ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேடு பகுதியில் மின்சாரம் , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பழங்குடியின மக்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேடு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா மின்சாரம் முறையான குடிநீர் உள்ளிட்டவை வழங்கக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .

அதனை கண்டித்து இன்று தடபெரும்பாக்கம் கூட்டு சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக மின்சாரம் குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தூக்கிடப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு :
பொன்னேரி அருகே மரத்தில் தூக்கிடப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு. அடித்துக் கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறை விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள அத்திமரம் ஒன்றில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்னேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கிட்ட நிலையில் கிடந்த நபரை பார்த்தபோது வட மாநில தொழிலாளி என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் குடோனில் பணியாற்றி வருவதும், இவர் ஒடிசாவை சேர்ந்த சஷிகாந்தா கொடுவா என்பதும் இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. தூக்கிட்ட நிலையில் மரத்தில் காணப்பட்டதால் இவரை யாரேனும் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/enforcement-directorate-case-against-senthil-balaji-senthil-balajis-side-cross-examined-the-bank-manager/
குடும்ப தகராறு காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதிகாலை நேரத்தில் வட மாநில தொழிலாளி தூக்கிட்ட நிலையில் மரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது .



Leave a Reply
You must be logged in to post a comment.