ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கூலிங் கிளாஸ் அவசியமா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
ஒடிசா அருகே பாலசோர் பகுதியில் நடந்த கோர ரயில் விபத்தில் சுமார் 260க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கான மீட்புப் பணிகள் நிறைவுற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோரமண்டல் ரயில் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்து இந்தியாவையே உலுக்கியது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் தமிழ்நாடு சார்பில் அடங்கிய குழுவானது ஒடிசாவுக்கு விரைந்தது. அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் உள்ளிட்டோர் சென்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடே மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது! இன்னும் கண்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நம் கண்களை மூடவிடாமல் செய்கின்றன! இன்னும் நம் காதுகளில் மரண ஓலங்கள் ஒலித்துகொண்டிருக்கின்றன! இத்தனை இடர்களுக்கு இடையிலும் ஆய்வுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா? என்று அமைச்சர் உதயநிதிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.