வால்பாறை அடுத்துள்ள நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றில் 5 பேரும் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் 5 பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் அடுத்த வால்பாறை பகுதியில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நபில் ,வினித் குமார், தனுஷ் ,அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களின் உடல்களை ஆற்று நீரில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மூன்று உடல்கள் மீட்கப்பட்டனர்.
அருகில் உள்ள வால்பாறை அரசு மருத்துவமனைக்கு மூன்று உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு உடல்களை தேடும் பணியில் வால்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாணவர்கள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அடுத்த வால்பாறை பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த அப்பகுதியில் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.