புதுச்சேரியில் சோகம் : ஏ.எஸ்.ஐ மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை..!

2 Min Read

புதுச்சேரியில் மரத்தில் தூக்குபோட்டு ஏ.எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அடுத்த உள்ள மூலகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரவத்திரன் வயது (57). காவலரான இவர் கோரிமேட்டில் உள்ள மியூசிக் பேண்ட் யூனிட்டில் சிறப்பு துணை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். சிறப்பாக பணியாற்றக்கூடியவர் காவலர் வீரவடத்திரன்.மக்களிடையே நல்ல பெயர் எடுத்தவர். இதற்கிடையே நேற்று அதிகாலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வாக்கிங் செல்வதற்காக சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அவர் புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானம் வந்த பின் தனது சைக்கிளை வழக்கமான இடத்தில் நிறுத்தி விட்டு, தான் பணிபுரியும் மியூசிக் பேண்ட் யூனிட் பின்புறமுள்ள சப்போட்டா மரத்தில் அவர் எடுத்து வந்திருந்த துண்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் பின்புரம் சென்றவர் திரும்பவில்லை.

- Advertisement -
Ad imageAd image
கோரிமேடு காவலர் மைதானம்

அந்த பகுதியில் இருந்தவர்கள் பதற்றம் தொற்றிக்கொள்ள சென்று பார்த்த போது தூக்கு போட்ட நிலையில் அவரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பணிக்கு வந்த காவலர்கள், அலுவலகத்தின் பின்புறமுள்ள மரத்தில் ஏ.எஸ்.ஐ வீரவத்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வடக்கு பகுதி எஸ்.பி பக்தவச்சலம் உத்தரவின் பேரில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய ஏ.எஸ்.ஐயின் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில், சமீபகாலமாக அவர் தீராத வயிற்று வலி மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து வீரவத்திரன் தற்கொலை செய்வதற்குமுன், எழுதிய கடிதம் சிக்கியது.

தன் கை கடிதத்தில் எழுதிய கடிதம்

அதில், எனக்கு தீராத வயிற்று வலி, உடல் வலி இருந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன். நானேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள், என்று எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில் அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து அந்த கடிதம் பற்றிய உண்மை தன்மை பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply